புரட்டாசி மாதம் வரும் அமாவாசை முன்னோர்களுக்கு உரிய நாளாக கருதப்பட்டு அன்று நீர்நிலைகளில் மக்கள் குவிந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் சிரார்த்த காரியங்களை செய்வர்.
இந்த அமாவாசை மஹாளயபட்ச அமாவாசை என அழைக்கப்படுகிறது.அமாவாசை தொடங்குவதற்கு 15 நாள் முன்பே பிரதமை திதியில் துவங்கி அமாவாசை வரும் நாள் வரை எந்த நாளிலும் முன்னோர்களுக்கு பித்ரு காரியம் செய்யலாம் என்பது இந்த மஹாளய அமாவாசையின் சிறப்பு.
இன்று கொரோனா கட்டுப்பாடுகளால், ராமேஸ்வரம், சதுரகிரி, சேதுக்கரை, தேவிபட்டினம், திருபுவனம், திருச்சி அம்மா மண்டபம் உள்ளிட்ட பல இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தடையை மீறி பல இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதை கட்டுப்படுத்த போலீஸ் திணறி வருகிறது.







