ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் அண்ணாத்த படத்தின் பாடல் இன்று வெளியாகியுள்ளது. இதில் எஸ்.பி.பி பாடிய அண்ணாத்தே பாடல் பர்ஸ்ட் சிங்கிளாக வெளியாகியுள்ளது.
எஸ்.பி.பி இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் பாடிய பாடல் இது.
இந்த பாடல் குறித்து ரஜினி கூறியபோது,
45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.
இவ்வாறு ரஜினி டுவிட்டரில் கூறியுள்ளார்.







