தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.குடிப்பழக்கம் மட்டுமின்றி கஞ்சா உள்ளிட்ட பொருட்களின் விற்பனையும் எல்லா இடங்களிலும் தாராளமாகவே நடக்கிறது.
போதையால் விபத்துக்களும் அதிக அளவில் நடக்கிறது. போதை வாகன ஓட்டிகளால் அப்பாவிகளும் இறக்கிறார்கள்.
இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்,
சமீபத்திய சாலை விபத்துக்களில் இளைஞர்கள் பலியான கோரச் சம்பவங்கள் பதறவைக்கின்றன. போதையே காரணம் என்கிறார்கள். தமிழகத்தில் தலைதூக்கி இருக்கும் இந்த போதைக் கலாச்சாரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக முதல்வர் உடனடிச் செயல்பாட்டில் இறங்க வேண்டும் என கோரியுள்ளார்.













