சென்னை, மதுரை, கோவை, சேலம், நெல்லை, திருச்சியில் மிகப்பெரும் ஷாப்பிங் மால்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள் இயங்குகின்றன. இந்த கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள் சொற்ப சம்பளத்துக்கு வேலை செய்கின்றனர் ஆனால் இவர்களுக்கு உட்கார அனுமதி கிடைப்பது இல்லை.
நின்று கொண்டே இருக்க வேண்டும் வரும் வாடிக்கையாளர்களை வரவேற்று விளக்கம் கொடுத்து கொண்டே இருக்க வேண்டும். தவறான இம்முறை பற்றி பொதுவெளிகளில் ஏற்கனவே விமர்சனங்கள் இருந்து வந்தது.
இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய அங்காடி தெரு படத்தில் கூட இது பற்றிய காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது.
தற்போது இது விசயமாக சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஜவுளிக்கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு இருக்கைகள் வழங்குவதற்கான சட்ட திருத்தம் செய்ய சட்ட முன் வடிவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார் அமைச்சர் திட்டக்குடி கணேசன்.













