பிரபல ஹிந்தி சீரியல் நடிகர் சித்தார்த் சுக்லா. இவரின் சீரியல்கள் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பபட்டது. இவர் ஜலக் தில் ஜா உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார்.
2005ஆம் ஆண்டு உலகின் சிறந்த மாடல் என்ற பட்டத்தையும் சித்தார்த் சுக்லா வென்றுள்ளார். அதன் பிறகு இந்தி ‘பிக் பாஸ்’ 13-வது சீசனில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார்.
இந்நிலையில் இன்று (செப் 02) காலை திடீரென சித்தார்த் சுக்லாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மும்பையில் உள்ள கூப்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர் இரண்டு சகோதரிகள் மற்றும் தாயுடன் வசித்து வந்துள்ளார். இரவு தூங்குவதற்கு முன் ஏதோ மாத்திரைகளை இவர் சாப்பிட்டார் எனவும் கூறப்படுகிறது..
இவரின் மறைவுக்கு நடிகை ஹன்சிகா உள்ளிட்டோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
Shocked beyond words!! Condolences to his family, loved ones.He was loved by millions. #SiddharthShukla you will be https://t.co/wcpwS8jCkm in peace 💔 pic.twitter.com/tsOIquzLOS
— Hansika (@ihansika) September 2, 2021









