முருகனின் அறுபடை வீடுகளில் புகழ்பெற்ற ஒரு கோவில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவில். அனுதினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகின்றனர். சாமி தரிசனம் இங்கு செய்யவும் நீண்ட நேரங்கள் ஆகும்.
ஸ்பெஷல் டிக்கெட்டில் இருந்து எந்த டிக்கெட் எடுத்தாலும் இங்கு தரிசனம் செய்ய சில மணி நேரங்கள் காத்திருந்துதான் தரிசனம் செய்ய வேண்டும்.
அந்த அளவு கூட்ட நெரிசல் மக்கள் கூட்டம் இந்த கோவிலுக்கு முருகனை காண வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆவணி மாதம் திருவிழா திருச்செந்தூர் முருகன் கோவிலில் விசேஷமான திருவிழாவாகும். தேர்த்திருவிழா எல்லாம் இந்த மாதம்தான் நடைபெறும்.
தற்போது கொரொனா அபாயத்தால் யாரும் கோவிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் எனவும் ஆவணித்திருவிழா முறைப்படி ஆகம விதிப்படி பக்தர்கள் இல்லாமல் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.













