---Advertisement---

கொரோனா காரணமாக ஹஜ் பயணம் குறைவான நபர்களுக்கே

Published on: May 25, 2021
---Advertisement---

கொரோனா 2வது அலையின் தீவிரமாக இந்தியாவில் உள்ளது இதன் காரணமாக ஹஜ் பயணம் மேற்கொள்ள 5000 பேருக்கு மட்டுமே அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கொரோனா 2-ம் அலையின் தீவிரம் கடும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. இதை அடுத்து வரும் ஜூலை மாதம் 60,000 ஹஜ் பயணிகளை அனுமதிக்க சவூதி அரேபிய அரசு முடிவு செய்துளளது. பீதியில் உள்நாட்டை சேர்ந்த 15,000 பேரையும் பிறநாடுகளை சேர்ந்த 45,000 பயணிகளையும் அனுமதிக்க சவூதி அரேபியா திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து 5,000 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக மத்திய ஹஜ்  கமிட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளது. இருப்பினும் மாநில வாரியாக எவ்வளவு பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்ற விவரங்கள் எல்லாம்  வெளியாகவில்லை. வழக்கமாக இந்தியாவில் உள்ள 1,000 இஸ்லாமியர்களில் ஒருவர் என்ற அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் அதன்படி 2019-ம் ஆண்டு 1.75 லட்சம் பேர் இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொண்டனர்.

இந்த ஆண்டு 18 வயதுக்கு குறைவான மற்றும் 60 வயதுக்கு மேல் உள்ளோரை அனுமதிக்க போவது இல்லை என்றும், கடந்த 6 மாதங்களில் மருத்துவமனைகளில் எந்த நோய்க்காகவும் அனுமதிக்கப்படாதவர்கள் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் என ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Vijay Sethupathi with a lineup of over six upcoming films.

அடுத்தடுத்து களமிறங்கும் விஜய் சேதுபதி: ஒரே நேரத்தில் 6-க்கும் மேற்பட்ட படங்களில் பிசி!

Kavin and Nayanthara in the new release date promo for the movie Hi.

“நம்மா எதுக்கு பேசணும், படம் பேசட்டும் ஜி”: கவின் – நயன்தாராவின் க்யூட் ‘ஹாய்’ பட புதிய ரிலீஸ் தேதி ப்ரோமோ!

Producer Archana Kalpathi explaining the status of Thani Oruvan 2.

‘தனி ஒருவன் 2’ படம் தாமதமாவது ஏன்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட அதிரடித் தகவல்!

Reports suggest Trisha and Hiphop Aadhi joining Karthi and Mohan Raja's upcoming film.

கார்த்தி – மோகன் ராஜா கூட்டணியில் இணையும் த்ரிஷா மற்றும் ஹிப்ஹாப் ஆதி: வெளியானது செம மாஸ் தகவல்!

Janhvi Kapoor and Sreeleela teaming up for a new film directed by Umesh Bist.

முதல் முறையாக இணையும் ஜான்வி கபூர் மற்றும் ஸ்ரீலீலா: உமேஷ் பிஸ்ட் இயக்கத்தில் புதிய படம்!

Directors Andrew Louis and Thiagarajan Kumararaja discussing Pocket Novel.

தியாகராஜன் குமாரராஜா கைகளுக்குச் சென்ற ‘பாக்கெட் நாவல்’ கதை: இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் ஓபன் டாக்!