அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக ஒரு காலத்தில் இருந்தவர் நயினார் நாகேந்திரன். இவர் சில வருடங்கள் முன் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார்.
பாஜகவில் சேர்ந்த நயினார் நாகேந்திரன் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் தனது சொந்த ஊரான திருநெல்வேலி தொகுதியில் நின்று வெற்றி பெற்று பாஜக சார்பில் எம்.எல்.ஏ ஆனார்.
இவர் ஏற்கனவே எம்.எல்.ஏ ஆக இருந்ததால் சட்டசபை அனுபவம் அதிகம் இவருக்கு உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் நான்கு தொகுதியில் தாமரை ஜெயித்து அதன் உறுப்பினர்கள் சட்டசபைக்கு செல்ல உள்ளதால் சட்டசபையில் இவரது கட்சி குழு தலைவராக இவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.













