தமிழக முதல்வராக திரு. முக ஸ்டாலின் இன்று காலை பதவியேற்றுக்கொண்டார். அவரோடு 35 பேர்கள் கொண்ட அமைச்சரவை அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனே அதிரடியான 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு அதற்கான அரசாணையும் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக உதயச்சந்திரன், உமாநாத், எம்.எஸ் சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் கடந்த காலங்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக உதயச்சந்திரன் இருந்தபோது அவரது செயல்பாடுகள் அதிரடியாக இருந்தது. இவர் மதுரை, ஈரோடு மாவட்டங்களில் கலெக்டராக இருந்தபோது இவருக்கு நல்லதொரு வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.













