நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை மறுதினம் அதாவது 2.05.2021 அன்று எண்ணப்படுகிறது. அதனால் இது குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் கூறியிருப்பதாவது.
பெருந்தொற்றின் சூழலில் வாக்கு எண்ணும் இடங்களில் குவிந்து தொற்றுக்கு ஆளாகிவிட வேண்டாம். திமுக-வினருக்கு மட்டுமின்றி மாற்றுக் கட்சித் தோழர்களுக்கும் இது என் அன்பு வேண்டுகோள்! கொண்டாட்டத்தைவிடவும் நம் அனைவரின் உயிர் முக்கியம். வீதிகள் வெறிச்சோடி உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும்!
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.













