---Advertisement---

அதர்வாவின் தம்பியும் சினிமாவில் அறிமுகம்

Published on: February 22, 2021
---Advertisement---

பூவிலங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் முரளி. கன்னட பட இயக்குனர் சித்தலிங்கையாவின் மகனான இவர் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ரவுண்டு வந்தார் முன்னணி நடிகராக விளங்கினார்.

கடந்த 2010ம் ஆண்டு திடீர் மாரடைப்பால் முரளி இறந்தார். அப்போதுதான் அவர் நடித்திருந்த பாணா காத்தாடி படம் வெளியாகி இருந்தது. 99 படத்தில் நடித்து 100வது படத்தில் நடிக்க இருந்த நிலையில் முரளி மரணத்தை தழுவினார்.

முரளியின் மகன் அதர்வா பாணா காத்தாடி படத்தின் மூலம்தான் அறிமுகமானார். முரளியின் மரணத்திற்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் நடித்த அதர்வா இப்போது முன்னணி நடிகராக விளங்குகிறார்.

இவரின் தம்பியும் தற்போது நடிக்க வந்துவிட்டதுதான் ஆச்சரியம். இயக்குநர் விஷ்ணுவர்தன் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, அதில் முரளியின் இளையமகன் ஆகாஷை நாயகனாக்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இவருக்கு திருமணம் நடந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.