சின்மயியை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. மிகுந்த பரபரப்பான விசயங்களுக்கு சொந்தக்காரர். மிகவும் துணிவான பெண் என பெயர் எடுத்தவர் இவர்.
சில வருடங்களுக்கு முன் கவிஞர் வைரமுத்து மீது இவர் மீடு பாலியல் குற்றச்சாட்டை சுமத்திய நிலையில் பலரும் பாலியல் ரீதியாக தங்களை துன்புறுத்தியவர்களை பற்றி வெளியில் கூறலாயினர்.
சின்மயி பலருக்கும் உதவி செய்யும் பழக்கம் உள்ளவர். நடிகரும் அரசியல்வாதியுமான எஸ்.வி சேகர் அவர்கள் சின்மயியை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
பலருக்கு பிறந்த நாள் வாழ்த்து பாடல்களை பாடி, வந்த வருமானத்தையெல்லாம் கொரோனா காலத்தில் வருமானமின்றி தவித்த கலைஞர்களுக்கு வழங்கிய @Chinmayi க்கு என் பாராட்டுக்கள் என எஸ்.வி சேகர் பாராட்டியுள்ளார்.








