---Advertisement---

அதிமுக செய்தி தொடர்பாளராக அப்சரா ரெட்டி நியமனம்

Published on: November 29, 2020
---Advertisement---

அதிமுக செய்தி தொடர்பாளராக அப்சரா ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றியவர் சமீபத்தில் அதிமுகவில் இணைந்தார். தொலைக்காட்சிகளில் பிரபலமான ஆளுமைகளை வைத்து நிகழ்ச்சி நடத்தியவர் இவர்.

திருநங்கையான அப்சரா ரெட்டி இரண்டு ஆங்கிலப் பத்திரிகைகளின் சென்னைப் பதிப்பின் இணைப்பு இதழ்களுக்கு ஆசிரியராக இருந்தவர். தமிழ்த் திரை நட்சத்திரங்களுக்கு நெருக்கமான தோழி. இப்போது தந்தி டி.வி -யில் ‘நட்புடன் அப்சரா’ என்னும் நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்.

அரசியல்வாதிகள் அனைவரையும் நன்கு அறிந்தவர். பல பிரபலங்களுடன் நெருங்கிய நட்பு உள்ளவர்.சென்னையில் இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் கிரானிக்கல் என  இரண்டு பெரிய செய்தித்தாள்களின் சென்னை எடிஷனில் ஆசிரியராக வேலை பார்த்தவர் இவர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா இவருக்கு மிகவும் பிடித்த நபராவார்.

பத்திரிக்கைகள் மட்டுமின்றி லண்டனில் இருந்தபோது ஸ்காட்லாண்ட் யார்டு, காமென்வெல்த் செகரெட்டேரியட் போன்றவற்றில் வேலை செய்திருக்கிறார்.

இவரை அதிமுக செய்தி தொடர்பாளராக முதல்வர் ஈபிஎஸ் துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் இணைந்து அறிவித்துள்ளனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.