---Advertisement---

கொல்கத்தாவில் பேரணிக்கு அழைப்பு… 6 ஆயிரம் போலீசார் உட்பட 3 அடுக்கு பாதுகாப்பு…! 

By Sri
Published on: August 27, 2024
---Advertisement---

கொல்கத்தா ஆர்ஜிகர் அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இதற்கிடையில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கு எதிராக கடும் விமர்சனம் எழுந்து வருகின்றது.

மம்தா பானர்ஜி உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் மேற்கு வங்கத்தில் உள்ள ரெஜிஸ்டர் செய்யாத மாணவர்கள் அமைப்பு இன்று பேரணி நடத்துவதாக அறிவித்திருந்தது. மேற்கு வங்க மாநில தலைமைச் செயலகம் அமைந்துள்ள இடம் முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பல முக்கிய மந்திரிகள் அலுவலகம் இங்குதான் அமைந்திருக்கின்றது.

இந்நிலையில் பேரணி வன்முறையாக மாறிவிடக்கூடாது என்பதற்காக 6000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கின்றது. நல்ல எண்ணம் கொண்ட குடிமக்களின் கோபத்தை தவறாக பயன்படுத்தி மேற்கு வங்கத்தில் பிரச்சனையையும் அராஜகத்தையும் உருவாக்குவதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த பேரணிக்கு அழைப்பு விடுத்த ஒருவர் நட்சத்திர ஓட்டலில் அரசியல் கட்சித் தலைவர் ஒருவரை சந்தித்ததாகவும் தெரிவித்திருக்கின்றார். மேலும் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்கு 6000 போலீசார் குவிக்கப்படுவார்கள் தடுப்பு அமைக்கும் 19 இடங்களை கண்டறிந்து இருக்கின்றோம் என போலிஸ் அதிகாரி தெரிவித்து இருக்கின்றார். பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக மீது திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகின்றது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Jaw-Dropping News for Government Employees: Luxurious Trains Added to Travel Scheme

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க