---Advertisement---

கொரோனா சிகிச்சையில் குணமான 51 பேருக்கு மீண்டும் வைரஸ் தொற்று ! அதிர்ச்சியில் மக்கள்!

By Sri
Published on: April 8, 2020
---Advertisement---

தென் கொரியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் குணமான 51 பேருக்கு மீண்டும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனா தாக்குதல் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,03,000 ஐ தாண்டியுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 81,000 ஐ தாண்டியுள்ளது. சீனாவின் வூஹான் மாநிலத்தில் முதன் முதலாக பரவிய வைரஸ் இன்று உலகின் அனைத்து நாடுகளுக்கும் பரவி விட்டது.

கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட  நாடுகளில் தென் கொரியாவும் ஒன்று. அங்கு இதுவரை 10384 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 6000 பேர் சிகிச்சையில் குணமடைந்தும் 200 பேர் பலியாகியும் உள்ளனர். அங்குள்ள டாயிகு மாகாணத்தில் சிகிச்சையில் குணமாகியதாக வீட்டுக்கு அனுப்பப்பட்ட 51 பேருக்கு மீண்டும் கொரோனா இருப்பதாக வெளியான செய்தி அதிர்ச்சியளித்துள்ளது.

இதுபற்றி இருவிதமான கருத்துகள் சொல்லப்பட்டு வருகின்றன. முதலில் இது சோதனைகளில் நடந்த தவறாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் மற்றொரு தரப்போ மனித உடலில் உள்ள கோடிக்கணக்கான செல்களில் எங்காவது கொரோனா ஒட்டியிருந்து மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என நம்புகின்றனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

விஜய் மற்றும் அஜித் பற்றிப் பேசும் இயக்குனர் எச்.வினோத்.

True Stars Revealed: Vinoth Praises! – விஜய், அஜித் மனிதாபிமானம்: எச்.வினோத் நெகிழ்ச்சி!

Director Atlee praises the Ramayana trailer.

Atlee’s Epic Praise: Ramayana Trailer Blows Everyone Away! – ராமாயணம் டிரெய்லர்: அட்லீயின் அதிரடிப் பாராட்டு! வியந்துபோன இயக்குனர்!

Advance bookings open for JanaNayagan movie.

Booking Fever: JanaNayagan Hits Theaters! – முன்பதிவு சூடுபிடித்தது! ஜனநாயகன் ரிலீஸ் அப்டேட் – பிரீமியர் ஷோக்கள் எப்போது?

Actress Aishwarya Lekshmi quits social media platforms.

Actress Aishwarya Lekshmi’s Shocking Decision! – 100 கோடி கொடுத்தாலும் நோ! சமூக வலைதளத்தை விட்டு விலகிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Thalapathy Vijay's Thirupaachi re-releasing in theaters.

Thirupaachi Re-Release Confirmed! – மெகா பிளாக்பஸ்டர் மீண்டும் வருகை! திரையரங்குகளில் ரிலீசாகிறது தளபதியின் ‘திருப்பாச்சி’!

தேசிய விருதுகள் குறித்து கலா மாஸ்டர் விளக்கம்.

National Award Snubs Exposed – கடும் போட்டி! தனுஷ், சேதுபதி, சிவகார்த்திகேயன் – தேசிய விருது கிடைக்காதது ஏன்? உண்மையை உடைத்த கலா மாஸ்டர்!