---Advertisement---

அமெரிக்காவில் நடந்த கார் விபத்து… தமிழகத்தைச் சேர்ந்த 4 இந்தியர்களுக்கு நடந்த கொடூர சம்பவம்…!

By Sri
Published on: September 4, 2024
---Advertisement---

அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த இளம் பெண் உட்பட நான்கு இந்தியர்கள் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

அமெரிக்காவில் 5 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு பெண் உட்பட 4 இளம் இந்தியர்கள் உடல் கருகி உயிரிழந்திருக்கிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை அன்று தமிழகத்தை சேர்ந்த தர்ஷினி வாசுதேவன், ஐதராபாத்தைச் சேர்ந்த ஆர்யன் ரகுநாத் ஒராம்பட்டி, பரூக் ஷேக், லோகேஷ் பலசார்லா ஆகியோர் டெக்சாஸ் மாகாணத்திலிருந்து அர்கான்சாசில் உள்ள பெண்டான்வில்லி எஸ்யூவி காரில் பயணித்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

டெக்ஸாஸ் மாகாணம் காலேஜ் கவுண்ட்டி பகுதியில் அன்னா நகரில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த காரின் பின்புறம் லாரி ஒன்று மோதியது. இதில் கார் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது.  அந்த கார் மீது பின்னால் வந்த நான்கு வாகனங்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் கார் தீப்பற்றி ஏறிந்தது. இதில் காரில் இருந்த நான்கு பேரால் வெளியில் வர முடியவில்லை. அவர்கள் காருக்குள்ளேயே சிக்கி உடல் கருகி பலியானார்கள்.

உடல் தீயில் கருகியதால் உயிரிழந்தவர்களின் அடையாளங்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்த நால்வருக்கும் ஒருவரை ஒருவர் தெரியாத நிலையில் நான்கு பேரும் கார்பூ லிங் செல்போன் செயலி மூலம் காரை வாடகைக்கு எடுத்து சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து கார்பூ லிங் நிறுவன தரவுகளின் மூலம் அவர்களின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் மரபணு சோதனை மூலம் உடலை அடையாளம் காணும் பணிகளை போலீசார் நடத்தி வருகின்றனர். அவர்களது உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரின் உதவியை பெற்றோர் நாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

தேசிய விருதுகள் குறித்து கலா மாஸ்டர் விளக்கம்.

National Award Snubs Exposed – கடும் போட்டி! தனுஷ், சேதுபதி, சிவகார்த்திகேயன் – தேசிய விருது கிடைக்காதது ஏன்? உண்மையை உடைத்த கலா மாஸ்டர்!

யஷ் நடிக்கும் 'டாக்சிக்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூருவில் ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபெறுவதை அறிவிக்கும் போஸ்டர். / Official poster announcing the trailer launch event for the Yash starrer 'Toxic' in Bengaluru on August 8.

Massive Excitement Builds Up: யஷின் ‘டாக்சிக்’ ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

பேட்டி ஒன்றில் மைக்ரோஃபோன் முன்னிலையில் புன்னகையுடன் பேசும் இளம் இயக்குநர் ஜேசன் சஞ்சய்.

Jason Sanjay Interview: அப்பா விஜய், அம்மா சங்கீதா பற்றி முதல்முறையாக மனம் திறந்த ஜேசன் சஞ்சய்! நெகிழ்ச்சிப் பின்னணி!

Rio Raj shooting for Varuthapadatha Valibar Sangam 2.

“விவிஎஸ் இஸ் பேக்!” – வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 படப்பிடிப்பு ஆரம்பம்! ரியோ ராஜ் நடிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் மீண்டும் அதிரடி!

Director Susi Ganesan making a comeback with Oranda movie.

9 ஆண்டு இடைவெளி: புதிய கதைக் களத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கும் சுசி கணேசன்!

Sivakarthikeyan dealing with financial issues and Seyon shooting updates.

அதிர்ச்சி தகவல்: நஷ்டத்தை ஈடுகட்ட விளம்பரங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!