மதுரை அழகர் கோவிலில் காவல் தெய்வமாக எல்லை தெய்வமாக இருப்பது பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவில். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக இப்பகுதி மக்களால் போற்றப்படுகிறது.

இப்பகுதி மக்களால் துடியான தெய்வம் என கருப்பசாமி அழைக்கப்படுகிறது. அழகர் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளுக்கு இந்த தெய்வமே காவல் தெய்வம்.

காத்து, கருப்பு, பில்லி, சூனியம், ஏவல் என எப்பிரச்சினைக்கும் பதினெட்டாம்படி கருப்பசாமியை வேண்டி கொள்கின்றனர்.
இக்கோவிலுக்கு ராஜேந்திரன் என்ற பக்தர் ஒருவர் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமிக்கு கொடுப்பதற்காக 200 கிலோ எடை கொண்ட ராட்சத அருவாள் ஒன்று தயாரித்துள்ளார்.
20 நாட்கள் பலர் இணைந்து இந்த அரிவாளை தயாரித்துள்ளனர்.













