---Advertisement---

சாலையில் ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்ட youtuber… வைரலாகும் வீடியோ…!

By Sri
Published on: August 23, 2024
---Advertisement---

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பரபரப்பான சாலையில் யூட்யூபில் ஒருவர் ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்ட வீடியோவானது பலரையும் விமர்சிக்க வைத்திருக்கின்றது. அந்த பணத்தை எடுக்க மக்கள் முண்டியடித்து ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோவில் பவர் ஹர்ஷா என்ற மகாதேவ் பைக்கில் பயணம் செய்தபடி பணத்தை தூக்கி எரிகின்றார். மற்றொரு வீடியோவில் அவர் சாலையின் நடுவில் நின்று கொண்டு பணத்தை பறக்க விடுகின்றார். இதனால் சிதறிய நோட்டுக்களை எடுக்க வாகன ஓட்டிகளும் தங்களது வாகனங்களை நிறுத்தி பணத்தை எடுக்கிறார்கள்.

மேலும் நடந்த சென்றவர்களும் ரூபாய் நோட்டுகளை முண்டியடித்துக் கொண்டு எடுத்து வந்தனர். சாலையில் சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை எடுக்க முயன்றவர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் திடீரென ஏற்படக்கூடிய விபத்துக்கள் குறித்து கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள். இந்த சம்பவத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி சமூக வலைதள பக்கங்களில் போலீசாருக்கு மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க