---Advertisement---

வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு… டைவர்ஸ் கேட்ட மனைவிக்கு ஆசிட்… கணவனின் கொடூர சம்பவம்…!

By Sri
Published on: September 27, 2024
---Advertisement---

வேறு ஒரு பெண்ணுடன் கணவன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நிலையில் மனைவி விவாகரத்து கேட்டதால் அவருக்கு ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

இன்றைய சூழலில் கள்ளக்காதல் மற்றும் கள்ள தொடர்பு என்பது அதிகரித்து வருகின்றது. ஒரு பெண் கணவனுடன் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே மற்றொரு ஆணுடன் தொடர்பு வைத்துக்கொள்வது. அதேபோல் ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே மற்றொரு பெண்ணுடன் தொடர்பு என்று கலாச்சார சீர்கேடு செய்து வருகிறார்கள். இதை தட்டி கேட்டால் அடி உதை விடுகின்றது.

அப்படி ஒரு சம்பவம் தான் அரங்கேறி இருக்கின்றது .தனது கணவன் மற்றொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை அறிந்த மனைவி விவாகரத்து கேட்டதால் அவர் மீது ஆசிப் வீசப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட ஒரு பெண் தனது கணவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதை அறிந்திருக்கின்றார் .

இதனால் அவரை விட்டு பிரிந்து கடந்த மூன்று மாதங்களாக தாய் வீட்டில் வசித்து வந்திருக்கின்றார். கணவர் வேலை இல்லாதவர் மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்பதையும் அந்தப் பெண் கண்டுபிடித்துள்ளார். இதன் காரணமாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற முடிவு செய்து இருக்கின்றார்.

இதை அறிந்த அந்த நபர் தாய் வீட்டில் தங்கியிருந்த மனைவி மீது ஆசிட் வீசியுள்ளார். இதில் தீக்காயம் அடைந்த பின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்தப் பெண் தனது கணவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசில் வழக்கு பதிவு செய்து இருக்கின்றார். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் கணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.