---Advertisement---

உலக சுகாதார நிறுவனத்துக்கு கமல் கண்டனம்

Published on: June 2, 2021
---Advertisement---

கடந்த 2019 இறுதியில் சீனாவில் வூகான் மாகாணத்தில் பரவிய கோவிட் என்ற கொடிய தொற்று உலகில் பல்லாயிரக்கணக்கானவர்களை அழித்து விட்டது. ஆனால் அந்த கொடிய வைரசோ உருமாறி உருமாறி வேறு நிலைகளை எடுத்து அதன் வீரியம் அதிகமாகி வருகிறது.

இதற்கிடையே இந்த உருமாறி வரும் கொரோனா வைரஸ்களுக்கு கிரேக்க மொழியில் ஆல்பா, பீட்டா, டெல்டா என உலக சுகாதார நிறுவனம் பெயர் வைத்துள்ளது.

இதற்கு நடிகர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் நெற்களஞ்சியத்தின் பெயரான டெல்டா என்ற பெயரை வைரசுக்கு சூட்டுவதா என உலக சுகாதார நிறுவனத்தின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் கமல்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.