இந்தியாவில் கொரோனா முழுவதுமாக குறைவது எப்போது என ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் தற்போது கொரோனா எண்ணிக்கை 21,000 ஐ தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 681 ஆக உள்ளது. சிகிச்சையில் குணமாகி 4257 பேர் குணமாகியுள்ளனர். ஊரடங்கு இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டாலும் இன்னும் புதிய பாதிப்பு எண்ணிக்கை குறையவில்லை. இந்நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எப்போது குறையும் என டைம்ஸ் பத்திரிக்கை நிறுவனத்துடன், சர்வதேச ஆய்வு நிறுவனமான புரோடிவிட்டி இந்தியாவில் கொரோனா பரவுதல் குறித்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது. அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளில் கொரோனா பரவியதன் சாத்தியங்களை கொண்டு மூன்று மாதிரி ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளன.
அந்த ஆய்வு முடிவில் மே 22ம் தேதிக்குள் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 75 ஆயிரமாக உயர வாய்ப்புள்ளதாக அந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. கொரோனா குறைவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்த வகையில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் செப்டம்பர் 15ல் கொரோனா பாதிப்பு பூஜ்ஜியத்தை அடையும் என்றும், மே 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் ஜூன் இறுதியில் கொரோனா பரவல் பூஜ்ஜிய நிலையை அடையும் என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.







