---Advertisement---

தமிழகத்தில் இன்று கனமழை – வானிலை மையம் அறிவிப்பு!

By Sri
Published on: May 17, 2019
அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை
---Advertisement---

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் அக்னி வெயில் கொளுத்தி வரும் வேளையில் வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சேலம், தர்மபுரி, ஈரோடு, வேலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தூத்துக்குடி, கோவை மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் கடந்த 4ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் வருகிற 29ம் தேதி வரை நீடிக்கிறது. சில இடங்களில் 110 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிக்கிறது. இந்நிலையில், வானிலை மையத்தின் அறிவிப்பு பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.