80களின் புகழ்பெற்ற பாடல்களை இன்ரிகோ மற்றும் லஹரி நிறுவனம் வினைல் இசைத்தட்டுகளாக அந்தக்காலத்தில் வெளியிட்டது. இதில் கேட்பது மிக துல்லியமாக இருந்தது. பிறகு கேசட்டுகள், மற்றும் சிடி, டிவிடி, பென் டிரைவ், மெமரி கார்டு என காலங்கள் மாறியதால் வினைல் ரெக்கார்டுகள் வருவதில்லை.
கடைசியாக தமிழில் வந்த வினைல் ரெக்கார்ட் பாடல்கள் எஜமான் படத்திற்குத்தான் வந்திருக்கின்றன. அதன் பிறகு வினைல்கள் வெளியிடப்படவில்லையாம்.







