தமிழில் முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே இந்த படத்தை மிஷ்கின் இயக்கி இருந்தார். இந்த படம் பெரிய அளவில் போகாத நிலையில் தெலுங்கு தேசம் சென்ற பூஜா ஹெக்டே முன்னணி நடிகையானார்.
தற்போது இவர் விஜய் நடிக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் திலீப்குமார் இயக்கும் விஜய்யின் 65வது படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.









