---Advertisement---

வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் கிச்சா சுதீப்

Published on: January 4, 2022
---Advertisement---

கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் கிச்சா சுதீப் நடிக்கும் புதிய படம் ஒன்றை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். கிச்சா சுதீப் விக்ராந்த் ரோணா படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இதனை சமீபத்தில் ஒரு வீடியோ பேட்டியில் உறுதி செய்துள்ளார் சுதீப். அந்த பேட்டியில் அவர் கூறும்போது, “நான் எதிர்பார்க்கும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் என்னுடைய சொந்த மாநிலத்தில் இருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்து எனக்கு வருகின்றன.

பாலிவுட்டில் இருந்து வருபவை அனைத்தும் வில்லன் கதாபாத்திரங்களாகவே இருக்கின்றன. அவை எனக்கு மிகவும் சவாலான கதாபாத்திரமாக இருந்தாலும் எனக்கு அவற்றின் மீது ஈர்ப்பு ஏற்படவில்லை. என்னுடைய அடுத்தப் படத்தை மங்காத்தா மற்றும் மாநாடு படங்கள் இயக்கிய வெங்கட் பிரபு இயக்க உள்ளார். அவர் ஒரு புத்திசாலித்தனமான இயக்குனர். அவரோடு பணிபுரிய நான் ஆவலாக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.