---Advertisement---

வந்தாச்சு வணங்கான் டிரையலர்…முடிவுக்கு வர போகுதா பாலாவோட ஃபெய்லியர்?…

Published on: July 8, 2024
Vanangaan
---Advertisement---

பாலா இவரது படங்களுக்கு என தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது. இவரது படங்கள் ஹிட் ஆகிறதோ இல்லையோ, அந்த படத்தின் ஹீரோ மெகா ஹிட் ஆகி விடுவார். அந்த அளவிற்கு ஆழமான நடிப்பு இருக்கும் படத்தில். சூர்யா, விக்ரம் இவர்களை எல்லாம் அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றவர் பாலா என்று சொல்லலாம்.

என்னதான் ஹீரோவாக அறிமுகம் ஆனாலும் அருண் விஜய்க்கு வாழ்வு கொடுத்த படம் என்று சொன்னால் அது “என்னை அறிந்தால்” ஆகத்தான் இருக்கும். நல்ல ஒரு வெற்றியை ருசி பார்க்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இருந்து வருகிறார் அருண் விஜய். அவருக்கு அடித்தது லக் என்றே தான் சொல்ல வேண்டும் பாலா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தை.

ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார் “வணங்கான்” படத்திற்கு. இதன் டிரையலர் சற்று முன்னர் வெளியாகி உள்ளது. எப்பவும் போல பாலாவின் அதே ஆக்சன் பார்முலாவில் தான் படம் வந்திருக்கிறது என்பதை கிட்டத்தட்ட உறுதி படுத்தும் விதமாகவே இருக்கிறது.

Arun vijay
Arun vijay

ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, முனீஷ் காந்த் என பலரும் நடித்துள்ளார்கள். டிரையலரை ஆக்கிரமித்துள்ளது அருண் விஜய் மட்டும் தான். அவரின் ஆக்சன், ரொமேன்ஸ் சீன்களுக்கே அதிக முன்னுரிமை. ஆனால் அவரின் ரியாக்சன்களை எல்லாம் பார்த்தால் பாலாவின் முந்தைய பட ஹீரோக்கள் நினைவுக்கு வந்து விடுகிறார்கள்.

அருண் விஜய் காட்டியுள்ள அதிரடியை பார்த்தால் இந்த படத்திற்கு பிறகு நிச்சயமாக ஒரு பெரிய டுவிஸ்ட் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கூடத்தான் செய்கிறது. அதே மாதிரி தான் தொடர்ச்சியாக தோல்விகளை பார்த்தே வரும் பாலாவிற்கும் இது மிகப்பெரிய திருப்புமுனையையும் கொடுக்க வேண்டும் எனபதுவும் பலரின் எதிர்பார்ப்பாகவே இருக்கக்கூடும்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

விஜய் மற்றும் அஜித் பற்றிப் பேசும் இயக்குனர் எச்.வினோத்.

True Stars Revealed: Vinoth Praises! – விஜய், அஜித் மனிதாபிமானம்: எச்.வினோத் நெகிழ்ச்சி!

Director Atlee praises the Ramayana trailer.

Atlee’s Epic Praise: Ramayana Trailer Blows Everyone Away! – ராமாயணம் டிரெய்லர்: அட்லீயின் அதிரடிப் பாராட்டு! வியந்துபோன இயக்குனர்!

Advance bookings open for JanaNayagan movie.

Booking Fever: JanaNayagan Hits Theaters! – முன்பதிவு சூடுபிடித்தது! ஜனநாயகன் ரிலீஸ் அப்டேட் – பிரீமியர் ஷோக்கள் எப்போது?

Actress Aishwarya Lekshmi quits social media platforms.

Actress Aishwarya Lekshmi’s Shocking Decision! – 100 கோடி கொடுத்தாலும் நோ! சமூக வலைதளத்தை விட்டு விலகிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Thalapathy Vijay's Thirupaachi re-releasing in theaters.

Thirupaachi Re-Release Confirmed! – மெகா பிளாக்பஸ்டர் மீண்டும் வருகை! திரையரங்குகளில் ரிலீசாகிறது தளபதியின் ‘திருப்பாச்சி’!

தேசிய விருதுகள் குறித்து கலா மாஸ்டர் விளக்கம்.

National Award Snubs Exposed – கடும் போட்டி! தனுஷ், சேதுபதி, சிவகார்த்திகேயன் – தேசிய விருது கிடைக்காதது ஏன்? உண்மையை உடைத்த கலா மாஸ்டர்!