---Advertisement---

என்ன வைரமுத்து சார் இப்படி செஞ்சிட்டீங்களே?…உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கவில்லையே!…எங்கேயோ கேட்ட குறள்…

Published on: May 26, 2024
---Advertisement---

கவிப்பேரரசு வைரமுத்து, இவரது வைரவரிகளில் தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்கள் எழுதியிருக்க அதில் பல வெற்றி பெற்றுள்ளது. இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், தேவா என இவர் யாருடன் கூட்டணி வைத்திருந்தாலும் இவர் எழுதிய பாடல்கள் பல மிகப்பெரிய அளவிலான புகழை பெற்றுத்தந்தது. அதோடு மட்டுமல்லாமல் அதில் நடித்த ஹீரோக்களுக்கும் கூட பெயர் வாங்கி கொடுத்தது

“நேருக்கு நேர்” படத்தில் சூர்யா நடனமாடும் ‘அவள் வருவாளா’பாடலை எழுதியது வைரமுத்துவே. திருக்குறள் காமத்துப்பாலில் 1101வது குரலினை வைத்தே இந்த பாடலை எழுதி இருக்கிறார்.

” கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள”-  குறள்.

பார்த்து, பேசி, நுகர்ந்து, ருசித்து, தொட்டு உணர்ந்து என ஐம்புலன்களும்
பெண்ணில் இருக்கிறது என்பதே இதன் பொருள்.

nerukku ner
nerukku ner

தனது காதலி சிம்ரனின் வரவை எண்ணி ஏக்கம், வருத்தம், ஆர்வத்தோடு சூர்யா நடனக்குழுவினருடன் இணைந்து பாடி, ஆடுவது தான்  பாடல். இந்த குறளை மூலமாக வைத்தே தான் ‘ஏ கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு அந்த பெண்ணில் இருக்கு’  இதுவே  “அவள் வருவாளா” பாடலின் இடையே வரும் வரிகள்.

இதனை எத்தனை பேர் கவணித்திருப்பார்கள்  என்பது தெரியாது. ஆனால் கவிஞரின் நுணுக்கம் என்ன என்பது இதன் மூலம் தெரிகிறது. ஹரிஹரன், மறைந்த பாடகர் சாகுல் ஹமீத் இவர்கள் இருவரும் இணைந்தே இந்த பாடலை படத்திற்காக பாடியிருந்தனர்.

இயக்குனர் வசந்த் இயக்கியிருந்த  “நேருக்கு நேர்”ல் தான் சூர்யா அறிமுகமானார். படத்தில் மற்றொரு கதாநாயகனாக விஜய் நடித்திருந்தார். துவக்கத்தில் அஜீத்குமார் தான் விஜயுடன் முதலில் நடிக்க  இணைவதாகயிருந்தது.

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official poster of movie Kara starring Dhanush announcing the pre-release event at Nehru Indoor Stadium Chennai.

KARA Event : “சென்னை நேரு ஸ்டேடியத்தில் தனுஷ்” – மிரட்டலான ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் தேதியை அறிவித்தது கர படக்குழு!

Actor Arjun Das acting in a promotional video for Con City where he is searched by Election Flying Squad.

Arjun Das Con City : “பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்?” – வைரல் வீடியோவின் பின்னணியில் இருக்கும் செம ப்ரோமோ!

Actor SJ Suryah in a candid interview explaining why he did not act in the movie Lubber Pandhu.

Lubber Pandhu Secret : “தினேஷ் ரோல்ல நான் நடிச்சிருக்கணும்” – லப்பர் பந்து கதையை எஸ்ஜே சூர்யா மறுக்க இதுதான் காரணமா?

Watermelon Star Diwakar submitting a petition at the Chennai Collector Office against Ma Ka Pa Anand and Pugazh.

CWC 7 Controversy : “கலெக்டர் ஆபீஸ் வரை போன திவாகர்” – மாகாபா, புகழ் மீது அதிரடி மனு; சிடபிள்யூசி செட்டில் நடந்தது என்ன?

Director Vignesh Shivan talking about Dhanush, Ajith Kumar, and the Jana Nayagan leak issue during LIK promotions.

Vignesh Shivan Interview: “Dhanush-உடன் என்ன பிரச்சனைன்னே தெரியல” – ஜன நாயகன் லீக் முதல் அஜித் வரை; விக்கி உடைத்த ரகசியங்கள்!

Actor Antony Varghese in a rugged look from the Malayalam trailer of Kattalan featuring 3 sound experiences.

Kattalan Trailer : “இந்திய சினிமாவிலேயே முதல்முறை” – 3 விதமான சவுண்ட் எக்ஸ்பீரியன்ஸுடன் வெளியான காட்டாளன் ட்ரைலர்; மிரட்டும் பிஜிஎம்!