---Advertisement---

தமிழகத்தில் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்- அமைச்சர் எ.வ வேலு

Published on: September 2, 2021
---Advertisement---

தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகள் பிரச்சினை நீண்ட நாள் பிரச்சினையாக உள்ளது. சில வருடங்கள் முன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை திருமங்கலம் சுங்கச்சாவடியில் தகராறு செய்தது. தமிழர் வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் பாரனுர் சுங்கசாவடியை தனது ஆட்களுடன் அடித்து நொறுக்கியது என பிரச்சினைகள் உள்ளது.

தென்மாநிலங்களில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில்தான் அதிகமாக சுங்கசாவடிகள் உள்ளதாக ஒரு குற்றச்சாட்டும் பொதுவில் உள்ளது.

தமிழ்நாட்டில் தேவையே இல்லாமல் 32 சுங்கச்சாவடிகள் உள்ளதாக கூறப்படுகிறது. சாலைகளின் நீளத்தின் அடிப்படையில் 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும் தேவையற்ற சுங்கச்சாவடிகளை மத்திய அரசிடம் சொல்லி அகற்ற பரிந்துரை செய்யப்படும் என அமைச்சர் எ.வ வேலு அறிவித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.