---Advertisement---

2-வது நாளாக மீண்டும் உயர்ந்த தங்கம் விலை… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் இதோ…?

By Sri
Published on: September 14, 2024
---Advertisement---

2-வது நாளாக இன்றும் சென்னையில் ஆபரண தங்கம் விலை உயர்ந்திருக்கின்றது. இது நகைப் பிரியர்களுடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்தியாவில் தினம்தோறும் சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படும். கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏறுமுகமாக இருந்து வந்தது. அதிலும் ஜூலை மாதம் ஒரு சவரன் தங்கம் 55 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகி வந்தது. அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்தது.

தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை குறைத்து அறிவித்தது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. இதனால் ஒரு சவரன் 51 ஆயிரத்துக்கும் சென்றது. ஆனால் இந்த சந்தோஷம் தொடர்ந்து நீடிக்கவில்லை. மீண்டும் பழையபடி தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்திக்க தொடங்கின. அந்த வகையில் ஒரு சவரன் தங்கம் 54 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகின்றது.

நேற்று ஒரு சவரன் தங்கம் 960 உயர்ந்த 54 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. இந்நிலையில் 2-வது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்திருக்கின்றது. அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 320 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்த 6,865 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து 97 ரூபாய்க்கு விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Tamil actor and director Sasikumar launching the official teaser of Guru Somasundaram starrer Paris Cafe movie tomorrow at 11 AM.

நாளைக்கு காலைல 11 மணிக்கு ஒரு சூப்பர் அப்டேட் வருது… மனசைத் தொடப்போகும் புதிய படத்தின் டீசரை வெளியிடும் சசிகுமார்!

Director Lokesh Kanagaraj motivational quote advising young filmmakers that he made his first short film with just 4000 rupees.

“என் முதல் படத்தை வெறும் 4,000 ரூபாயில்தான் எடுத்தேன்..” புதிய இயக்குநர்களுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த சீக்ரெட் சக்சஸ் டிப்ஸ்!

Producer KJR Rajesh giving a bold interview about Gen Z crowd backing TVK Vijay, Pradeep Ranganathan, and Blast movie box office success.

“வீட்லதான் உட்காரணும், புதுசுங்க வந்து தூக்கிட்டுப் போயிட்டே இருக்கும்..” பெரிய ஹீரோக்களின் சம்பள திமிரை உடைத்த கேஜேஆர் ராஜேஷ்!

Super Good Films officially announces the theatrical re-release of evergreen classic hit movie Thulladha Manamum Thullum starring Vijay and Simran.

90ஸ் கிட்ஸ்களின் எவர்கிரீன் காவியம்…. மீண்டும் தியேட்டருக்கு வருது தற்போதே கொண்டாட்டத்திற்கு ரெடியான ரசிகர்கள்!!

South Indian actor Dulquer Salmaan launching the first single track Sigma Style from the movie SIGMA today evening.

இன்னைக்கு சாயங்காலம் செம ட்ரீட் இருக்கு…. சிக்மா படத்தோட ஃபர்ஸ்ட் சிங்கிளை ரிலீஸ் செய்யப்போகும் முன்னணி ஸ்டார்!

Bollywood actress Janhvi Kapoor visiting Tirumala Tirupati temple seeking Lord Balaji blessings and celebrating the success response of her movie Peddi.

திருப்பதி ஏழுமலையான் பாதத்தில் ஜான்வி கபூர்! பெத்தி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்காக உருகிய நடிகை!!