---Advertisement---

தங்கம் விலை கூடி இருக்கா குறைஞ்சு இருக்கா…? இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம்..!

By Sri
Published on: October 5, 2024
---Advertisement---

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் 7,120 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது.

தங்கம் விலையானது கடந்த ஜூலை மாதம் முதலே தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதே மாதம் 22 ஆம் தேதி தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைப்பதாக தெரிவித்திருந்தது. இதன் எதிரொலியால் தங்கம் விலை சவரனுக்கு 2,200 வரை குறைந்தது. அதன் பிறகு விலை குறைந்து கொண்டே சென்று சவரன் 51 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக விற்பனையானது.

இது நகை பிரியர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. ஆனால் அது சில நாட்கள் மட்டுமே. ஆகஸ்ட் மாதம் இறுதியில் இருந்து மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியது அதிலும் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகின்றது. கடந்த மாதம் 24 ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் 7000 ரூபாயை தொட்டது.

கடந்த இரண்டு தினங்களுக்கும் முன்பு தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்தது. அதைத் தொடர்ந்து நேற்று 80 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் தங்கம் 56 ஆயிரத்து 960 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 7120 ரூபாய்க்கும் விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. நேற்றைய விலைக்கே இன்று தங்கம் விற்பனையாகி வருகின்றது. அதே போல் வெள்ளி விலையிலும் மாற்றமில்லை.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.