---Advertisement---

சற்று குறைந்த தங்கம் விலை… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் இதோ…!

By Sri
Published on: September 7, 2024
---Advertisement---

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்திருக்கின்றது.

கடந்த ஜூலை மாதம் தங்கம் விலை கிடுகிடுவென்று உயர்ந்து ஒரு சவரன் 55 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனையானது. இது நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தங்கம் என்பது பலருக்கும் எட்டாக்கனியாகிவிடும் என்று எண்ணத் தோன்றியது.

இதையடுத்து 2024 மற்றும் 25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்படும் என்று மத்திய நிதி மாதிரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன் எதிரொலியாக தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது.  இது நகைப் பிரியர்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதைத் தொடர்ந்து கடந்த 2-ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ரூ.53,360-க்கும், ஒரு கிராம் ரூ.6,670-க்கும் விற்பனையாகி வந்தது. நேற்று தங்கம் அதிரடியாக சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 53 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனையானது, ஆபரண தங்கம் கிராமிற்கு 50 ரூபாய் உயர்ந்து 6,720 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது.

வெள்ளி விலையும் கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து 92 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று சவரனுக்கு 320 ரூபாய் வரை குறைந்திருக்கின்றது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 440க்கு விற்பனையாகி வருகின்றது. ஆபரண தங்கம் கிராமிற்கு 40 ரூபாய் குறைந்து 6,680 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து 89 ரூபாய் 50 காசுக்கு விற்பனையாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Advance bookings open for JanaNayagan movie.

Booking Fever: JanaNayagan Hits Theaters! – முன்பதிவு சூடுபிடித்தது! ஜனநாயகன் ரிலீஸ் அப்டேட் – பிரீமியர் ஷோக்கள் எப்போது?

Actress Aishwarya Lekshmi quits social media platforms.

Actress Aishwarya Lekshmi’s Shocking Decision! – 100 கோடி கொடுத்தாலும் நோ! சமூக வலைதளத்தை விட்டு விலகிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Thalapathy Vijay's Thirupaachi re-releasing in theaters.

Thirupaachi Re-Release Confirmed! – மெகா பிளாக்பஸ்டர் மீண்டும் வருகை! திரையரங்குகளில் ரிலீசாகிறது தளபதியின் ‘திருப்பாச்சி’!

தேசிய விருதுகள் குறித்து கலா மாஸ்டர் விளக்கம்.

National Award Snubs Exposed – கடும் போட்டி! தனுஷ், சேதுபதி, சிவகார்த்திகேயன் – தேசிய விருது கிடைக்காதது ஏன்? உண்மையை உடைத்த கலா மாஸ்டர்!

யஷ் நடிக்கும் 'டாக்சிக்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூருவில் ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபெறுவதை அறிவிக்கும் போஸ்டர். / Official poster announcing the trailer launch event for the Yash starrer 'Toxic' in Bengaluru on August 8.

Massive Excitement Builds Up: யஷின் ‘டாக்சிக்’ ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

பேட்டி ஒன்றில் மைக்ரோஃபோன் முன்னிலையில் புன்னகையுடன் பேசும் இளம் இயக்குநர் ஜேசன் சஞ்சய்.

Jason Sanjay Interview: அப்பா விஜய், அம்மா சங்கீதா பற்றி முதல்முறையாக மனம் திறந்த ஜேசன் சஞ்சய்! நெகிழ்ச்சிப் பின்னணி!