---Advertisement---

கருணாநிதி குறித்த தமிழக அரசின் கோரிக்கை…ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு…

Published on: July 13, 2024
karuna Nithi
---Advertisement---

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான கருணாநிதி குறித்து தமிழக அரசின் சார்பில் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கையை ஏற்றுள்ளது. இது குறித்த ஒப்புதலை வழங்கியுள்ளது மத்திய அரசு.

கருணாநிதி ஜூன் மாதம் மூன்றாம் தேதி 1924ம் ஆண்டு பிறந்தார். இவரது நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கருணாநிதியின் பெயரில் நூறு வயதைக் குறிக்கும் விதமாக நூறு ரூபாய் நாணயத்தை வெளியிட தமிழக அரசு விரும்பியது.

இது குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை விடப்பட்டது. கடந்த ஜூன் மாதம் மூன்றாம் தேதியே இது குறித்த ஒப்புதல் அறிவிப்பு வெளியாகும் தமிழக எதிர்பார்த்தது.

Nirmala Seetharaman
Nirmala Seetharaman

ஆனால் சில காரணங்களால் அறிவிப்பு வெளியாகவில்லை இந்நிலையில் கருணாநிதி உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயத்தை வெளியிட சம்மதம் தெரிவித்து அதன் மீதான அரசாணையை அரசிதழில் வெளியிடப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதன் மீதான ஒப்புதல் கையெழுத்தை இட்டுள்ளார்.

ஒரு புறம் ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு 1924  – 2024’ அச்சிடப்பட்டும், மறுபுறம் தேசிய நினைவு சின்னமும் நாணயத்தின் மதிப்பான ரூபாய் 100ம் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு இந்த கோரிக்கையானது விடுக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது இதற்கான ஒப்புதல் அரசாணை அரசிதழில் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதலமைச்சரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணா நிதியின் நூற்றாண்டையடுத்து  தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்திருந்தது. மறைந்த கருணாநிதியின்  100வது பிறந்த தினம் திராவிட முன்னேற்றக் கழகத்தினரால் வெகு விமர்சையாக  கொண்டாடப்பட்டது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement poster for Era Saravanan's socio-drama sequel Nandhan 2.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இயக்குநர் இரா.சரவணனின் ‘நந்தன் 2’: சமூகத்தின் குரலை ஓங்கி ஒலிக்கத் தயாராகும் இரண்டாம் பாகம்!

Official character reveal promotional graphic of Vidya Balan as Kantha and SJ Suryah as Bodhi in Rajinikanth's Jailer 2.

ஜெயிலர் 2 படத்தில் வித்யா பாலன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா: ரஜினியின் மாஸ் படத்திலிருந்து அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி கதாபாத்திர அறிமுகங்கள்!

Official promotional graphic for the Sri Lankan Tamil film Anthony eyeing the 2027 Oscars.

ஆஸ்கார் களத்தில் இளையராஜாவின் ‘அந்தோனி’: வரலாற்று சாதனை படைக்கத் தயாராகும் முதல் இலங்கைத் தமிழ் திரைப்படம்!

Actress Shruti Haasan speaking candidly about PCOS, motherhood, and menstrual health.

“அம்மா ஆகணும், தத்தெடுக்கவும் தயார்!” – மாதவிடாய் வலி மற்றும் தாய்மை குறித்து நடிகை ஷ்ருதிஹாசன் மனம் திறந்த பேச்சு!

Official promotional teaser graphic for Ajith Kumar's motorsports documentary Gladiators.

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ டீசர் வெளியீடு: மோட்டார்ஸ்போர்ட் உலகை அதிரவைக்கும் ‘Gladiators: In Pursuit of Challenges’ அதிகாரப்பூர்வ டீசர்!

Official action-packed promotional trailer poster for Sundeep Kishan's Sigma directed by Jason Sanjay.

ஜெசன் சஞ்சய் இயக்கத்தில் சுந்தீப் கிஷனின் ‘சிக்மா’ ட்ரெய்லர்: மிரட்டலான கொள்ளை மற்றும் அதிரடி ஆக்‌ஷனுடன் வெளியானது மசாலா விருந்து!