முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் வீட்டிற்கு முன்பாக தீயணைப்பு வாகனம் நிறுத்த வைக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டின் மாடியில் உள்ள நீர் தொட்டிகளை நிரப்புவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களின் வெளியாகி வைரலாகி வந்தது. இந்த வீடியோவை பார்த்த பலரும் மகாராஷ்டிரா மூத்த ஐபிஎஸ் அதிகாரியான அர்ச்சனா தியாகியின் வீட்டிற்கு வெளியே தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.
அங்கு புகை மற்றும் நெருப்பு எதுவும் இல்லாமல் வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் போது தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி தண்ணீர் தொட்டிகளை நிரப்பி இருக்கிறார் என்றும், இப்படி பயன்படுத்தினால் தீ விபத்து ஏற்பட்டால் என்ன நடக்கும் என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள். இந்த சம்பவம் குறித்து டேராடூன் போலீசார் விளக்கமளித்திருக்கிறார்கள்.
அதில் வயதானவர்கள் இரண்டு பேர் வசிக்கும் வீட்டின் சமையலறையில் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு இருக்கின்றது. இதையடுத்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடனடியாக நடவடிக்கை எடுத்து சிலிண்டரில் தண்ணீரை ஊற்றி கசிவை குறைத்து இருக்கிறார்கள்.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மூத்த போலீஸ் சூப்பிரண்டு அஜய் சிங் தீயணைப்பு அதிகாரிகளை அழைத்து தகவல் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎஸ் அதிகாரியான தியாகி 1993 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர். மிக கண்டிப்பான அதிகாரி என்று பெயர் பெற்றவர். 2014 ஆம் ஆண்டு ராணி முகர்ஜி நடிப்பில் வெளியான மர்தாணி என்ற திரைப்படம் இவரை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.







