---Advertisement---

வந்துருச்சு தீபாவளி ட்ரீட்! ‘லோகா அத்தியாயம் 1’ OTT ரிலீஸ் தேதி கன்ஃபார்ம் – எங்க, எப்ப பார்க்கலாம்?

By Sri
Published on: October 17, 2025
Lokah Chapter 1 - Chandra OTT
---Advertisement---

இந்த வருஷம் மலையாள சினிமாவுலயே செம மாஸ் ஹிட் அடிச்ச படம் எதுன்னு கேட்டா, கண்ணை மூடிட்டு லோகா அத்தியாயம் 1: சந்திரா’-ன்னு சொல்லலாம்! கல்யாணி ப்ரியதர்ஷன்-ஐ வச்சு துல்கர் சல்மான் தயாரிச்ச இந்தப் படம், ஒரு ஃபேன்டசி சூப்பர் ஹீரோ கதை. ₹300 கோடிக்கு மேல வசூல் செஞ்சு மலையாள சினிமாவுக்கு ஒரு புது பெருமையைக் கொடுத்துச்சு.

சினிமாவுல படம் பார்த்தவங்க, பார்க்காதவங்கன்னு எல்லாரும் ஆவலா காத்துக்கிட்டிருந்த ஓ டி டி (OTT) ரிலீஸ் தேதி இப்போ கன்ஃபார்ம் ஆயிருக்கு.

லோகா அத்தியாயம் 1′ திரைப்படம் அக்டோபர் 20, 2025 அன்று ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஓ டி டி (OTT) தளத்தில் வெளியாகும்னு கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியிருக்காங்க. இது நம்ம தீபாவளிப் பண்டிகைக்கு சரியா ரெண்டு நாள் முன்னாடி வர்றதால, ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் ஸ்பெஷல் ட்ரீட்!

இந்த மாசக் கடைசியில இல்லைன்னா, தீபாவளி டைம்ல தான் ஓ டி டி (OTT)-க்கு வரும்னு எல்லாம் எதிர்பார்த்துட்டு இருந்தாங்க. ஆனா, தயாரிப்பாளர் துல்கர் சல்மான் ஆரம்பத்துல, இப்போதைக்கு ஓ டி டி (OTT)-க்கு வர்ற ஐடியா இல்லை, தியேட்டர்ல வந்து பாருங்க”-ன்னு சொல்லி இருந்தார். ஆனா இப்போ, படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆன நிலையில், அதிகாரப்பூர்வமற்ற தகவல் உறுதியா வெளியாகி இருக்கு.

Lokah Chapter 1 - Chandra Jio HotStar

இயக்குநர் டொமினிக் அருண் நம்ம ஊரு கள்ளியங்காட்டு நீலிங்கிற யக்க்ஷி கதையை வச்சு, மாடர்ன் உலகத்துல நடக்குற மாதிரி ஒரு சூப்பர் ஹீரோ கதையா இதை கொடுத்திருக்கார். படம் முழுக்க சண்டை, காமெடின்னு அம்சமா இருக்கும். அதனாலதான் இவ்வளவு பெரிய ஹிட்! இது வெறும் ஆரம்பம்தான், அடுத்து சாத்தான் (Tovino Thomas) கதைன்னு இந்த லோகா’ சீரிஸ்ல மொத்தம் அஞ்சு பாகங்கள் வரப்போகுதாம்.

சோ, கிட்டதட்ட கன்ஃபார்ம் ஆன இந்த நியூஸை உங்க ஃப்ரெண்ட்ஸ்கிட்ட எல்லாம் சொல்லி, அக்டோபர் 20ஆம் தேதிக்கு ரெடியாகுங்க!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Hollywood actress Emma Myers from Wednesday series praising Indian blockbuster movies Baahubali and 3 Idiots in a viral interview.

பாகுபலி, 3 இடியட்ஸ் படங்களை உருகி உருகிப் பாராட்டிய ஹாலிவுட் நடிகை… இணையத்தைக் கலக்கும் ஆல் ஈஸ் வெல் மேஜிக்!

Mega Power Star Ram Charan and Janhvi Kapoor attending Peddi movie Chennai press meet live promotional event.

சிங்கார சென்னைக்கு வரும் டாப் மாஸ் ஹீரோ… ஜூன் 4ல் தியேட்டர்களை அதிரவைக்க வரும் மெகா பட்ஜெட் படம்!

Director RJ Balaji sharing details about Aamir Khan message to actor Suriya and Silambarasan TR phone call praising Karuppu movie success.

சூர்யாவுக்கு வந்த மெசேஜ்… தியேட்டரை அதிரவிட்ட பட இயக்குநரை நேரில் அழைத்துப் பாராட்டிய டாப் ஹீரோ!

Sun Pictures celebrating 10 million plus Spotify streams milestone poster for the viral hit track Raga Of Revenge.

ஸ்பாட்டிஃபையில் 10 மில்லியன் ஸ்ட்ரீம்கள் கடந்து சாதனை படைத்த சன் பிக்சர்ஸின் மாஸ் ட்ராக்

Actor Akash Murali debut movie launch pooja stills with director H Vinoth and producer Raahul from Romeo Pictures.

கோலிவுட்டில் அறிமுகமாகும் முன்னணி நடிகரின் வாரிசு… எச் வினோத் முன்னிலையில் பிரம்மாண்ட தொடக்கம்!

Actor Naga Chaitanya wins personality rights case in Delhi High Court against unauthorized AI use and merchandising.

பெயர், குரல், புகைப்படம் பயன்படுத்த அதிரடி தடை; நீதிமன்றத்தை நாடிய பிரபல முன்னணி நடிகர்!