---Advertisement---

தஞ்சை கோரம்- கோவிலில் நடந்த அப்பர் திருவிழாவில் தேர் எரிந்து 10க்கும் மேற்பட்டோர் பலி

Published on: April 27, 2022
---Advertisement---

தஞ்சாவூர் அருகே உள்ளது களிமேடு என்ற கிராமம். இந்த கிராமம் தஞ்சையில் இருந்து 8 கிமீ தூரத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் அப்பர் மடத்துக்கென கோயில் உள்ளது.

வருடா வருடம் சித்திரை மாதத்தில் அப்பர் பிறந்த தினத்தில் அவரது குருபூஜையாக கருதப்பட்டு திருவிழா நடைபெறும். இந்த வருடத்துக்கான திருவிழா நேற்று நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வே தேரோட்டம்தான் இந்த தேரோட்டம் நேற்று இரவு 12 மணியளவில் இவ்வூரில் நடைபெற்றது. தேர் ஊரை சுற்றி வரும்போது  மின் கம்பியில் உரசியதில் தேரில் இருந்த அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். ஒருவர் எரிந்து சாம்பலானார்.

தேர்த்திருவிழாவை பார்த்த மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். தேரை வளைவில் இழுக்கும்போது தேர் உயர் அழுத்த மின்சார கம்பியில் பட்டதே விபத்துக்கு காரணம் என தெரிய வருகிறது.

இந்த விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டவர்கள் தீக்காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களில் சிறுவர் சிறுமியரும் அடக்கம். 94 வருடமாக சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா இப்படி எதிர்பாராத விதமாக மோசமான விபத்தாக மாறி விட்டதே என அப்பகுதி மக்கள் வருத்தத்தில் உள்ளனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Sibi Sathyaraj riding a retro-style bike with a 'TVK 2026' number plate.

ரெட்ரோ ஸ்டைல் போட்டோவால் வைரலாகும் சிபி சத்யராஜ்: பைக் நம்பர் பிளேட்டில் ‘TVK 2026’ – விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!

Official promotional poster for the romantic comedy Sandakkari.

நீண்ட காத்திருப்புக்குப் பின் ‘சண்டக்காரி’: விமல் மற்றும் ஸ்ரேயா நடிப்பில் திரைக்கு வரும் ரொமான்டிக் காமெடி படம்!

Official theatrical release promotional banner for the sea sports thriller Mandaadi.

நாளை முதல் திரையரங்குகளில் ‘மண்டாடி’: சூரி நடிப்பில் உருவாகியுள்ள கடல் சாகச த்ரில்லர் படம் ரிலீஸ்!

Official first look poster of Drones launched by director AR Murugadoss.

ஆர்.முருகதாஸ் வெளியிட்ட ‘டிரோன்ஸ்’: வினோத ஜானரில் உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Promotional design celebrating the massive box office success of Hanuman Ansh.

ரூ.2 கோடி பட்ஜெட்… ரூ.170 கோடி வசூல்: பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் ‘ஹனுமான் அன்ஷ்’!

Director Mari Selvaraj and legendary composer Ilaiyaraja in a file photo.

மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’: காயது லோஹர், பிரியங்கா மோகன் மற்றும் இசைஞானி இளையராஜா குறித்து இயக்குநர் மனம் திறப்பு!