தஞ்சை பெரிய கோவிலில் வருடம் தோறும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜசோழனுக்கு வருடம் தோறும் சதய விழா நடைபெறுகிறது.இந்த வருடம் சதய விழா மக்கள் கூட்டம் இல்லாமல் அமைதியாக நடைபெறுகிறது.
எப்போதும் இந்த சதய விழாவுக்கு மக்கள் கூட்டம் பெரும் திரளாக திரண்டு வரும்.இந்த வருடம் கொரோனா பாதிப்பால் விழாவுக்கு தடையளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் விழா சிறிய முறையில் நடைபெற்று வருகிறது. ராஜராஜசோழனின் 1035வது சதயவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தஞ்சை பெருவுடையாருக்கு 48விதமான பொருட்களால் அபிசேகம் செய்யப்பட்டது.
















