---Advertisement---

ஆப்கானில் முறைப்படி புதிய அரசு இன்று அமைகிறது

Published on: September 3, 2021
---Advertisement---

அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து அங்கிருந்த ஜனநாயக ஆட்சியை அதிரடியாக அகற்றி விட்டு தங்களின் அரசை 20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அமைத்தனர் தாலிபான்கள்.

தாலிபான்களின் ஆட்சி பிடிக்காமல் பலர் நாட்டை விட்டு தெரியாமல் வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் ஆப்கானில் புதிதாக ஆட்சி அமைத்த தாலிபான்கள் முறைப்படி யார் யார் எந்த பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதை வெளியிட இருக்கிறார்களாம்.

இன்று முறைப்படி யார் யார் நாட்டை நிர்வகிப்பார்கள் என்ற பெயரை அறிவிக்க இருக்கிறார்களாம். பிரதமர் மற்றும் அதிபருக்கும் மேலாக சுப்ரீம் லீடர் என்பவர் செயல்படுவார் என தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.