---Advertisement---

தெலுங்கானா முதல்வரை சந்தித்த விஜய்

Published on: May 19, 2022
---Advertisement---

விஜய் நடிப்பில் சில கடந்த மாதம் வெளியான பீஸ்ட் திரைப்படம் அவரே எதிர்பார்க்காத அளவு பயங்கர தோல்வியை தழுவியது. இதனால் படக்குழுவினரே அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் விஜய் தனது அடுத்த படமாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைதிபள்ளி இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் வழக்கமான ஆக்சன் படங்கள் போல் அல்லாமல், குடும்பம், காதல், ஆக்சன் கலந்து இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவை நடிகர் விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

அப்போது அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் இயக்குனர் வம்சி பைதிபள்ளியும் இருந்தார்.

 

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.