---Advertisement---

வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா… கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்…!

By Sri
Published on: August 29, 2024
---Advertisement---

வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற மாதா பேராலயத் திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் துவங்கி இருக்கின்றது.

இயேசுவின் தாயாக கருதப்படும் மாதா தன் கையில் குழந்தையான இயேசுவுடன் காட்சி தரும் பேராலயம் வேளாங்கண்ணியில் இருக்கின்றது. இந்த தளம் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் தளமாக விளங்குகிறது. புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும்.

இந்த ஆண்டிற்கான வேளாங்கண்ணி பேராலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயர் தம்புராஜ் கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பல மாவட்டங்களை சேர்ந்த மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கொடியேற்றத்தை தொடர்ந்து ஆவே மரியா என்று முழக்கமிட்டு பக்தர்கள் பிரார்த்தனை செய்தார்கள். திருவிழாவை ஒட்டி பேராலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. இந்த திருவிழா செப்டம்பர் 8-ம் தேதி வரை தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் என்று கூறப்படுகின்றது.

மேலும் இந்த விழா நாட்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பழமொழிகளில் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விழா நாட்களில் தினமும் மாலையில் தேர் பவனி நடைபெறும். பேராலயத்தில் இருந்து புறப்பட்டு கடற்கரை வழியாக சென்று மீண்டும் பேராலயத்திற்கு தேர் பவனி வந்தடையும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆரோக்கிய மாதா பெரிய தேர் பவனி செப்டம்பர் 7ஆம் தேதி இரவு 7:30 நடைபெறுகின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement visual layout for the new film collaboration between director Ashwin Saravanan and Attakathi Dinesh.

மாயா, கேம் ஓவர் இயக்குநருடன் கைகோர்க்கும் அட்டகத்தி தினேஷ்: புதிய படத்தின் அதிரடி அறிவிப்பு!

Media visual highlighting Sun TV acquiring the satellite rights for Dhanush's OM.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷின் ‘ஓம்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சன் டிவி!

Director Shankar praising Baththa movie poster.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தைப் பார்த்து வியந்த இயக்குநர் ஷங்கர்: சிறுவனின் நடிப்பு தேசிய விருதுக்குத் தகுதி!

Dhanush D56 movie production announcement poster.

126 கோடி பட்ஜெட்டில் தனுஷின் ‘D56’: இசையமைப்பாளராக களமிறங்கும் சாய் அபியங்கர்!

Actor Suriya praising Dorothy movie poster.

கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ படத்தை பாராட்டித் தள்ளிய நடிகர் சூர்யா: படக்குழுவினருக்கு வாழ்த்து!

Jailer 2 movie censor debate poster.

சென்சார் சோதனையில் சிக்கிய ரஜினியின் ‘ஜெயிலர் 2’: ‘ஏ’ அல்லது ‘உ/ஏ’ சான்றிதழுக்காக நடக்கும் விவாதம் என்ன?