நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு முக்கிய காரணமே ராகுல் காந்தி தான் என்று விஜயதாரணி பேசி இருக்கின்றார்.
தமிழகத்தை மீட்போம், தளராது உழைப்போம் என்ற தலைப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது பொதுக்கூட்ட மேடையில் பேசிய பாஜக பிரமுகர் விஜயதாரணி “நான் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டரை ஆண்டு காலம் பதவியிலிருந்தும், இருக்கின்ற பதவியை விட்டுவிட்டு பாஜகவில் இணைந்துள்ளேன்.
அதற்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வரவில்லை. எதிர்பார்ப்போடு தான் வந்திருக்கின்றேன். பாஜகவில் சேர்ந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது இன்னும் எனக்கு எந்த பதவியும் கொடுக்கவில்லை. எனக்கு நல்லது பண்ணுவீங்க என்று தெரியும். என்னை போன்றவர்களை பாஜக நிச்சயம் பயன்படுத்தும். என்ன அண்ணே அப்படித்தானே..? அண்ணாமலையை பார்த்து விஜயதரணி கேட்டார்.
இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. இடைத்தொடர்ந்து விஜய் கட்சி தொடங்கியதற்கு காரணமே ராகுல் காந்தி தான் என்று புதிய தகவலை பகிர்ந்து இருக்கின்றார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர் நடிகர் விஜய் ராகுல் காந்தியிடம் காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு கேட்டார்.
உங்கள் செல்வாக்கு தனி கட்சியே தொடங்கலாம் என்று ராகுல் காந்தி யோசனை வழங்கினார். அதன் விளைவாகத்தான் தற்போது விஜய் கட்சி தொடங்கி இருக்கின்றார். அதனால் காங்கிரஸ் கட்சியுடன் அவர் இணக்கமாக போவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அவர் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார் யாரை எதிர்க்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்று தெரிவித்திருந்தார்.