national
சூடா ஜிலேபி வாங்கிட்டு வா போ… புகார் அளிக்க வந்த வருடம் நூதன முறையில் லஞ்சம்… போலீஸ் அட்ராசிட்டி..!
உத்திரபிரதேசம் மாநிலம் தலைநகர் லக்னோவில் இருந்து 91 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் கிராமம் கனௌர். பகதூர்கார் என்ற காவல் நிலைய வட்டத்திற்குள் வரும் இந்த கிராமத்தை சேர்ந்த நபர் தான் குமார். கடந்த சனிக்கிழமை அன்று மருந்து வாங்க சென்ற இடத்தில் தனது செல்போனை அவர் தொலைத்திருக்கின்றார்.
எங்கு தேடியும் அந்த செல்போன் கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் காரணமாக காவல் நிலையம் சென்ற குமார் தனது செல்போனை காணவில்லை என்று கூறி போலீசாரிடம் கண்டுபிடித்து கொடுக்குமாறு புகார் கொடுத்துள்ளார். மொபைல் போனை பறிகொடுத்த குமார் மனவேதனையில் கூறிய புகாரை முழுமையாக கேட்டுக் கொண்ட போலீசார் இறுதியில் புகார் கொடுக்க குமாரை சில விஷயங்களை செய்ய வைத்திருக்கிறார்கள்.
மொபைலை பறிகொடுத்த குமாரிடம் அதனை சீக்கிரம் கண்டுபிடிக்கலாம் என்று கூறுவதற்கு பதில் போலீஸ் அதிகாரி முதலில் கடைக்கு சென்று சூடான பாதுஷா இல்லை என்றால் ஜிலேபி ஆகியவற்றில் ஒரு கிலோ வாங்கி வரும்படி கூறியிருக்கின்றார். இனிப்பு வாங்காமல் போலீசார் புகாரை பதிய மாட்டார்கள் என்று உணர்ந்த குமார் கடைக்கு சென்று ஜிலேபி வாங்கிக் கொண்டு வந்து கொடுத்திருந்தார்.
குமார் வாங்கி வந்த ஜிலேபியை பெற்றுக் கொண்ட போலீசார் அதன் பிறகு மொபைல் போன் காணாமல் போன பதிவை பெற்றுக் கொண்டனர். இதே மாதத்தில் காவலர் ஒருவர் பணியில் இருக்கும் போது உருளைக்கிழங்குகளில் லஞ்சமாக பெற்றதற்கு பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.