தமிழ் திரையுலகில் சமூக வலைதளங்கள் மூலமாக பிரபலமானவர் பிஜிலி ரமேஷ். இவர் பிளாக் ஷிப் என்ற youtube சேனல் நடத்திய நகைச்சுவை தொடரில் பங்கேற்று தனது வசனத்தின் மூலமாக பலரின் கவனத்தை ஈர்த்தவர். பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
அதன்பிறகு 2019 ஆம் ஆண்டு ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த நட்பே துணை என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து ஜோதிகா நடிப்பில் வெளிவந்த பொன்மகள் வந்தாள், அமலா பால் நடிப்பில் வெளியான ஆடை உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார்.
இவருக்கு அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம் இருந்திருக்கின்றது. இதனால் உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையில் இருந்த இவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். இவரின் இறப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.