Latest News
ரேஷன் கடைகளில் வரும் செப்டம்பர் 5 வரை… இந்த பொருள்கள் அனைத்தும் கிடைக்கும்… வெளியான தகவல்..!
ஆகஸ்ட் மாதத்திற்கான பாமாயில் துவரம் பருப்பை செப்டம்பர் 5ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்திருக்கின்றது.
ரேஷன் கடைகளில் ஆகஸ்ட் மாதத்திற்கான ரேஷன் பொருள்களை பெறாதவர்கள் அதனை பெற்றுக் கொள்ளும்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் ஆகஸ்ட் மாதத்திற்கான பாமாயில், துவரம் பருப்பு போன்ற பொருட்களை வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று உணவு பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்திருக்கின்றது.
இது தொடர்பாக உணவு பொருள் வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது “உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் அனைத்து நியாய விலை கடைகளிலும் ஆகஸ்ட் 2024 ஆம் ஆண்டிற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீட்டினை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வரை பாமாயில் துவரம் பருப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள்” எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொண்டு பொருள் வாங்காதவர்கள் வாங்கி பயன்பெறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.