Latest News

வீடுகளுக்கு முன்பு இதுபோல போர்டு வைக்கத்தடை… சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!

Published on

சென்னையில் வீடுகளுக்கு முன்பு நோ பார்க்கிங் போர்டு வைப்பதற்கு தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.

சென்னையில் பொது இடங்களில் மோட்டார் வாகனங்கள் நிறுத்துவதை தடுப்பதற்காக நோ பார்க்கிங், பலகைகள், தடுப்புகள் அல்லது மணல் மூட்டைகள் வைக்கக்கூடாது என்று தனியார் கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டி சென்னை ஹைகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னையில் வீடுகளுக்கு முன்பு அனுமதி இன்றி நோ பார்க்கிங் போர்டுகள் தடுப்புகளை வைத்திருப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருக்கின்றது.

இது குறித்த விதிமுறைகளை பத்திரிக்கை ஊடகம் மற்றும் இணையதளம் வழியே வெளியிடவும் காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் வீடுகளுக்கு முன்பாக அனுமதி இன்றி வைத்துள்ள நோ பார்க்கிங் போர்டுகள் பூந்தொட்டிகளையும் அகற்ற கோரி நந்தகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version