Latest News

எந்த சேஞ்சும் இல்லை…அதே நேற்றைய விலை தான் இன்னைக்கும் விற்கப்படுது தங்கம்…

Published on

கடந்த வார துவக்கத்தில் அதிரடியாக குறைந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது தங்கத்தின் விலை. யாருமே எதிர்ப்பார்த்திராத வண்ணம் விலை உயர்வை சந்தித்து தொடர்ச்சியாக அதிர்ச்சியை மட்டுமே தந்து கொண்டிருந்தது ஆபரணத்தங்கத்தின் விற்பனை விலை.

கடந்த வாரத் துவக்கத்திலிருந்து இறங்கு முகத்திலேயே இருந்து வந்த தங்கத்தின் விலை மெல்ல மெல்ல உயர்வை நோக்கி சென்றது. தொடர்ச்சியாக குறைந்து வந்த தங்கத்தின் விலையால் மகிழ்ச்சியடைந்து வந்த ஆபரண பிரியரிகளின் சந்தோஷம் அதிக நாட்கள் நீடிக்க வில்லை. வார இறுதி நாட்களை நெருங்க நெருங்க உயர்வை நோக்கியே போனது விற்பனை விலை.

Ornaments

நேற்று ஞாயிற்றுக்கிழமை இருபத்தி இரண்டு கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ஆறாயிரத்து அறனூற்றி என்பத்தி ஐந்து ரூபாயாக (ரூ.6,685/-), ஒரு சவரனின் விலை ஐம்பத்தி மூனாயிரத்து நானூற்றி என்பது ரூபாயாக இருந்து வந்தது (53,480/-). வாரத்துவக்கமும், மாதத்தின் முதல் நாளுமான இன்று சென்னையில் தங்க விற்பனை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விற்பனை விலையிலேயே விற்கப்படுகிறது. நகை பிரியர்களுக்கு இது ஆறுதல் தரும் செய்தியாகவே அமைந்தது.

வெள்ளியின் விலை தங்கத்தை போல இல்லாமல் நேற்றை விட சற்று உயர்ந்துள்ளது. நேற்றைய விலையை விட கிராமுக்கு இருபது பைசாவும், ஒரு கிலோவிற்கு இருனூறு உயர்ந்துள்ளது. இதன் படி இன்றைய வெள்ளியின் விறபனை விலை கிராம் ஒன்றிற்கு தொன்னூற்றி நான்கு ரூபாய் எழுபது பைசாவாகவும் (ரூ.94.70/-). ஒரு கிலோ வெள்ளியின் விலை தொன்னூற்றி நான்காயிரத்து எழனூறு ரூபாய்க்கு (ரூ.94,700/-) விற்கப்படுகிறது.

Trending

Exit mobile version