Latest News
தமிழகத்தில் 2 நாட்கள் வெப்பம் சுட்டெரிக்கும்… வானிலை ஆய்வு மையம் கொடுத்த எச்சரிக்கை…!
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிக அளவில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று மற்றும் நாளை தான் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது. தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு அதாவது இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இருக்கும்.
பொதுவாக இருக்கும் வெப்பநிலையை காட்டிலும் இரண்டு டிகிரி செல்சியஸ் முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் .அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும்.
நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.