Connect with us

3-வது முறையாக பதக்கம் வென்ற மாரியப்பன்… முதல்வர் மு.க ஸ்டாலின் பாராட்டு…!

Latest News

3-வது முறையாக பதக்கம் வென்ற மாரியப்பன்… முதல்வர் மு.க ஸ்டாலின் பாராட்டு…!

3-வது முறையாக பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்து இருக்கின்றார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 பேர் கொண்ட அணியினர் பங்கேற்று இருக்கிறார்கள். இதுவரை இந்திய அணி 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என்று மொத்தம் 20 பதக்கங்களை பெற்றிருக்கின்றது.

பாரா ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் ஷரத்குமார் வெள்ளிப் பதக்கத்தையும், மாரியப்பன் தங்கவேலு வெண்கல பதக்கத்தையும் வென்றிருக்கின்றார். பாரா ஒலிம்பிக்கில் மூன்றாவது முறையாக பதக்கம் வென்றிருக்கும் மாரியப்பன் தங்கவேலுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றார்.

அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருந்ததாவது: “3-வது முறையாக பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு வாழ்த்துக்கள். தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாக திகழும் நமது தங்கமகனின் வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துகிறேன்” என்று கூறியிருக்கின்றார்.

மாரியப்பன் தங்கவேலு ரியோ, டோக்கியோ, பாரா ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே பதக்கம் வென்றிருக்கும் நிலையில் தற்போது மூன்றாவது முறையாக பாரீசில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியிலும் பதக்கம் வென்று இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in Latest News

To Top