Latest News
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் வரும் 11ம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கின்றது.
மேலும் தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் காலை முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது. அதன்படி மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது.