Latest News
முடிவடைந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல்…வெற்றி யாருக்கு?…
திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானவர் புகழேந்தி. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் உடல் நலக்கோளாறு காரணமாக காலமானார். இவரது மரணத்தையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் தேர்தல் கமிஷன் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலை அறிவித்தது. இந்த தேர்தலில் முக்கியமான கட்சிகளாக பார்க்கப்பட்டது திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவை தான். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய திராவிட முற்போக்குக் கழகம் ஆகிய கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது.
இந்நிலையில் இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடந்து முடிந்தது. காலை ஏழு மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. தொகுதிக்குட்பட்ட இருனூற்றி எழுபத்தி ஆறு வாக்குச்சாவடிகளிலும் மாலை ஆறு மணி வரை வாக்குப் பதிவு நடந்தது. மதியம் ஒரு மணி நிலவரப்படி 50.95 சதவீத வாக்குகள் பதிவானது. மூனு மணி நிலவரப்படி 64.44 சதவீத வாக்குகள் பதிவானது.
ஐந்து மணி நிலவரப்படி 77.73 சதவீதமாக இருந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு. தொடர்ந்து நடைபெற்ற வாக்குப்பதிவானது மாலை ஆறு மணி வரை நடத்தப்பட்டது.
ஆறு மணிக்கு முன்னதாக வாக்களிக்க வாக்குச்சாவடி மையத்திற்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. வருகிற பதிமூன்றாம் தேதி சனிக்கிழமையன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதற்குப் பின்னரே வெற்றி யாருக்கு, யார் சட்டமன்றத்திற்கு செல்வார்கள் என்பது தெரிய வரும்.