யானை போஸ்டர்- கவுதம் மேனன் பாராட்டு

யானை போஸ்டர்- கவுதம் மேனன் பாராட்டு

அருண் விஜய்யின் 33வது படமாக யானை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்றுதான் வெளியிடப்பட்டது. முதலில் இப்படத்துக்கு அரிவாள் என பெயர் வைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமில்லாத தகவல் உலவியது குறிப்பிடத்தக்கது.

காரைக்குடி, ராமேஸ்வரம், நாகூர் பகுதிகளில் இப்படம் படமாக்கப்பட்டு வரும் நிலையில் யானை என பெயரிடப்பட்ட இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அருண் விஜய்யின் ஒவ்வொரு புகைப்படமும் செம மாஸ் ஆக உள்ளது. இதுவே இப்படம் மிகப்பெரும் ஆக்சன் படம் என உணர்த்துகிறது.

இந்த படத்தின் போஸ்டர்களை வைத்து அதிக எதிர்பார்ப்பு இப்படத்துக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் படத்தின் போஸ்டர்களை பார்த்த இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனும் இப்படம் மிகப்பெரிய அளவில் வேகமாக ஓடும் ஆக்சன் படமாக இருக்கும் என்று கருத்திட்டுள்ளார்.